உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாளப் பிரதமர்

22/07/2024 05:35 PM

காத்மாண்டு, 22 ஜூலை (பெர்னாமா) -- நேபாளப் பிரதமராகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி ஷர்மா ஒளி வெற்றி பெற்றார்.

நான்கு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு தலைமையேற்கும் அவர் 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்துள்ளார்.

அந்நாட்டில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து புஷ்பா கமால் டஹால் தலைமையிலான சி.பி.என் மாவோயிஸ்டின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனை அடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷர்மா ஒளி அண்மையில் புதிய கூட்டணியுடன் பதவியேற்றார்.

அந்நாட்டின் அரசியலமைப்பு படி 30 நாட்களுக்குள் புதிய பிரதமர் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 188 பேர் ஷர்மா ஒளிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மொத்தம் 275 நாடாளமன்ற உறுப்பினர்களில், 263 பேர் மட்டும் வந்திருந்த நிலையில், அதில் அவருக்கு எதிராக 74 வாக்குகள் பதிவாகின.

நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா, பிரதமர் ஷர்மா ஒளிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அவரின் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]