உலகம்

57-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் லாவோசில் தொடங்கியது

25/07/2024 04:38 PM

லாவோஸ், 25 ஜூலை (பெர்னாமா) -- 57-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் இன்று, லாவோஸ் தலைநகர் வியண்டியனில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், ஆசியான் சமூகத்தின் மேம்பாடு உட்பட ஆசியான் 2024-இன் முதன்மை மற்றும் வெற்றிகரமான துறைகள் ஆகிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

குழுக்களின் வெளி உறவு, கூட்டு நன்மையளிக்கும் வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் உட்பட, ஐந்து அம்சங்களில் உடன்பாட்டு அமலாக்கம் குறித்த ஆசியான் தலைவர்களின் ஆய்வையும் முடிவையும் தொடர்ந்து இக்கலந்துரையாடல் அமைந்துள்ளது.

இக்கூட்டத்திற்கு, மலேசியப் பேராளர் குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், தென்கிழக்காசிய தலைவர்களுடன் சேர்ந்து முக்கியமான 19 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

மேலும், நோர்வே, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவர் இருவழி கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)