பொது

நச்சுணவினால் மாணவர் மரணம்

26/07/2024 06:39 PM

சண்டக்கான், 26 ஜூலை (பெர்னாமா) -- நேற்று, சபா, சண்டக்கானில் உள்ள பள்ளி ஒன்றின் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் மரணமடைந்ததற்கு நச்சுணவு காரணம் என்று நம்பப்படுகிறது. 

இச்சம்பவம், பள்ளி சிற்றுண்டிச்சாலையில் உண்ட உணவால் இல்லை என்றும், மாறாக, அம்மாணவர் தன் தாயாருடன் வீட்டில் உண்ட உணவினாலேயே என்றும், சபா மாநில கல்வித் துறை, ஜே.பி.என்.எஸ் இயக்குநர் டத்தோ ரய்சின் சய்டின் தெரிவித்தார்.

அம்மாணவரின் தாயாரும் நச்சுணவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது வீட்டில் உண்ட உணவினாலேயே என்பது உறுதியானதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ரய்சின் கூறினார். 

அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுக்கு இன்று வரை நச்சுணவுக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

சண்டக்கான் மாவட்ட கல்வி அலுவலகத்தின் மூலம் காப்புறுதி தொகையைப் பெறுவதற்கு ஜே.பி.என்.எஸ் அக்குடும்பத்திற்கு உதவும் என்று ரய்சின் தெரிவித்தார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]