உலகம்

வெனிசுவேலா அதிபர் தேர்தல்; வாக்களிப்பு மையத்தில் சண்டை

29/07/2024 04:06 PM

வெனிசுவேலா, 29 ஜூலை (பெர்னாமா) -- வெனிசுவேலா அதிபர் தேர்தலில், நேற்று வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டதும் கராகாசில் உள்ள வாக்களிப்பு மையத்தில் சண்டை ஏற்பட்டது.

மீண்டும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைக்கு காத்திருந்த பதற்றம் நிறைந்த சூழலில், அந்நாட்டின் எதிர்கட்சி ஆதரவாளர்கள் கராகாசில் உள்ள ஆண்ட்ரெஸ் பெல்லோ வாக்களிப்பு மையத்திற்கு வெளியில் கூடினர்.

வாக்குகள் எண்ணும் நடவடிக்கையைக் காண தங்களை, உள்ளே நுழைய அனுமதிக்குமாறு தேர்தல் மையத்திற்கு வெளியில் இருந்த வாக்களர்கள் கேட்டுக் கொண்டதோடு, சுதந்திரத்திற்கான மற்றும் நிக்கோலஸ் மடுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்களை முழக்கமிட்டனர்.

வாக்காளர்கள் வாக்குகள் எண்ணும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையைக் கோரியதைத் தொடர்ந்து, தேர்தல் காலக்கட்டம் முழுவதிலும் நெருக்கடி வலுத்தது.

மோட்டார்சைக்கிள்களில் அவ்விடத்தை வந்தடைந்த மடுரோ ஆதரவாளர்கள், அங்கிருந்தவர்களிடையே தள்ளுமுள்ளை ஏற்படுத்தி கூச்சலிட்டதில் இரு தரப்பின் ஆதரவாளர்களுக்கு இடையே சண்டை மூண்டது.

இம்முறை அந்நாட்டின் அதிபர் தேர்தலில் இரண்டு கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

வாக்களிப்பிற்காக வாக்களிப்பு மையங்கள் அந்நாட்டு நேரப்படி காலை மணி 6-க்கு திறக்கப்பட்டன.

இத்தேர்தலில், 10 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள வேளையில், மூன்றாவது தவணையாக பதவியேற்க விரும்பும் அதிபர் நிக்கோலஸ் மடுரோவிற்கும், எதிர்கட்சி கூட்டணி ஆதரவளிக்கும் எட்மண்டோ கோன்சலஸ்சிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)