விளையாட்டு

இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சீனாவிடம் வீழ்ந்தது மலேசியா

02/08/2024 06:43 PM

பாரிஸ், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா சீனாவிடம் தோல்வி கண்டது.

காலிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறிய நாட்டின் மகளிர் இரட்டையரான பெர்லி டான் - எம்.தீனா ஜோடி, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல்நிலை சீன போட்டியாளர்களிடம் போராடி தோல்வி கண்டனர்.

சீனாவின், Chen Qing Chen-Jia Yi Fan ஜோடியிடம் முதல் செட்டில், 12-21 என்று பெர்லி டான் - எம்.தீனா ஜோடி தோல்வி கண்டது.

பின்னர், இரண்டாம் செட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த மலேசிய இணை 21-18 எனும் நிலையில் வெற்றிப் பெற்றது.

வெற்றியை இலக்காகக் கொண்டு மூன்றாம் செட்டில் போராடிய போதும், சீன
இணைக்கு ஈடுகொடுக்க முடியாமல் 15-21 என்ற நிலையில், பெர்லி டான் - எம்.தீனா ஜோடி தோல்வியைத் தழுவியது.

இந்த ஆட்டத்தில் மலேசிய இளம் வீராங்கனைகள் கடுமையாக போராடிய போதும், வெற்றி அவர்கள் வசமாகவில்லை.

இருப்பினும் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இவர்கள், வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மற்றுமொரு நிலவரத்தில், ஆடவர் இரட்டையர் பிரிவில் நாட்டின் முதன் நிலை இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடியும் அரையிறுதியில் தோல்வி கண்டது.

காலிறுதியில் இந்திய வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மலேசிய வீரர்கள், இந்த சுற்றில் சீனாவின் சீனா லியாங் வெய் கெங்-வாங் சாங் இணையரிடம் சவாலை எதிர்கொண்டனர்.

அதில், 21-19, 21-15 மற்றும் 21-17 என்று சீனாவிடம் வீழ்ந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)