பொது

ஜப்பானின் நிலநடுக்கம்; மலேசியர்களுக்கு பாதிப்பு இல்லை

09/08/2024 06:10 PM

கோலாலம்பூர், 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் உள்ள கியுஷு தீவில், வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதோடு, அண்மைய நிலவரங்களைத் தெரிந்து அமலாக்கத் தரப்பினரின் உத்தரவைப் பின்பற்றுமாறும் அங்குள்ள மலேசிய மக்களுக்கு அவ்வமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேல் விவரங்களைப் பெற உள்ளூர் தரப்புடன் இணைந்து தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.

இதன் தொடர்பில், தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் கீழ்காணும் விவரங்களைக் கொண்டு தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்

முகவரி                        : 20-16, Nanpeidai-cho Shibuya-ku, 150-0036 Tokyo
தொலைபேசி எண்    : +81-3-3476-3840 / +81-80-4322-3366 (அவசர அழைப்பு)
மின்னஞ்சல்              : mwtokyo@kln.gov.my / consular.tyo@kln.gov.m

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)