உலகம்

மத்திய அமெரிக்காவில் நிலநடுக்கம்

13/08/2024 08:07 PM

லாஸ் ஏஞ்சலஸ், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) --  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்லசில் நேற்று 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அமெரிக்க நேரப்படி சுமார் 12.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நில அதிர்வுகள் டெக்சஸ் மாநிலத்திலுள்ள பசடெனா Pasadena, கலிபோர்னியாவின் California,  கிலென்டேல் Glendale போன்றவற்றில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அதிகாரிகள் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உயிருடற்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)