விளையாட்டு

அம்பெய்தும் போட்டியில் சரவாக் முதல் தங்கம் வென்றது.

19/08/2024 08:01 PM

கூச்சிங், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மகளிருக்கான 70 மீட்டர் அம்பெய்தும் போட்டியில் சரவாக் தனது முதல் தங்கத்தை வென்றது.

சுமார் 46 போட்டியாளர்களைத் தோற்கடித்து ஜோ தான் ஸிங் லெய், அப்பிரிவில் வெற்றி பெற்றார்.

பெட்டாலிங் ஜெயா, அம்பெய்தும் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அவர் 72 அம்புகளை எய்து, 645 புள்ளிகளைச் சேகரித்து தங்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கத்தை சிலாங்கூரும், வெண்கல பதக்கத்தை திரெங்கானுவும் வென்றன.

இதனிடையே, கராத்தே போட்டியில், 24 ஆண்டுகால தங்கப் பதக்க காத்திருப்புக்கு அம்மாநில வீரர் ஃபென்ஸ்சி முடிவுக்குக் கொண்டு வந்தார்.

பல்வேறு காயங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், மகளிருக்கான தனிநபர் குமிட்டே 68 கிலோகிராம் பிரிவில் அவர் தங்கம் வென்றார்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)