விளையாட்டு

தங்கம் வெல்லும் இலக்கில் தோல்வி; ஹன்னா யோ மன்னிப்பு கோரினார்

14/08/2024 06:24 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வெல்லும் இலக்கில் மலேசிய விளையாட்டாளர்கள் தோல்வி அடைந்ததற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த ரோட் டு கோல்ட் (ROAD TO GOLD, RTG) திட்டம் தோல்வியடையவில்லை என்று கூறிய அவர், அத்திட்டம் தற்போதைக்கு வெற்றி பெறவில்லை என்றும் விளக்கினார்.

2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லும் நோக்கில் RTG திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை ஹன்னா யோ சுட்டிக்காட்டினார். 

RTG திட்டம் மலேசிய விளையாட்டாளர்களின் தரத்தை மேம்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு குழுக்களிடம் இருந்து அறிக்கையைப் பெற RTG செயற்குழு சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக ஹன்னா யோ கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)