விளையாட்டு

2024 சுக்மா விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கத்தை வென்றது மலாக்கா

14/08/2024 06:28 PM

கூச்சிங், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024 சுக்மா விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கத்தை வென்று மலாக்கா தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

வூஷு விளையாட்டின் மூலம், மலாக்கா இப்போட்டியின் முதல் தங்கப்பதக்கதை வென்றுள்ளது.

ஆடவருக்கான Nanquan பிரிவில் கலந்து கொண்ட பிரையன் டி காய் ஜீ (Bryan Ti Kai Jie) திறமையான சாகசங்களைச் செய்து மலாக்காவுக்குத் தங்கத்தைப் பெற்று தந்தார்.

9.600 புள்ளிகள் பெற்று தம்முடன் போட்டியில் இதர 16 போட்டியாளர்களையும் அவர் பின்னுக்குத் தள்ளினார்.

பேராக் மாநிம் வெள்ளிப்பதக்கத்தை வென்ற வேளையில், சரவாக் வெண்கலத்தைத் தட்டிச் சென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)