அரசியல்

ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மீண்டும் உருவெடுக்க அம்னோ எண்ணம்

23/08/2024 06:07 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மீண்டும் உருவெடுக்க அம்னோ எண்ணம் கொண்டுள்ளது.

மேலும், இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் உரிமையை பாதுகாக்கும் அம்னோவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் கட்சிகளை, தனது கூட்டணியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தையும் அக்கட்சி கொண்டிருக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிடி ஹமிடி தெரிவித்தார்.

அம்னோ ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அத்தகைய உயர்ந்த இலக்கை அடைவதில் அக்கட்சி ஒருபோதும் தடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

''ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், பெரிய லட்சியங்களை அடைவதில் இருந்து நாம் ஒருபோதும் தடுக்கப்படவில்லை. நாமே தேர்ந்தெடுக்கும் பாதையில், நமது சொந்த முறையில் ஆதிக்கத்திற்குத் திரும்ப நமக்கு உரிமை உண்டு," என்றார் டாக்டர் அஹ்மட் சாஹிட்.

அம்னோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதையும், பல்வேறு நன்மைகள் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மிகவும் அவசியம் என, இன்று 2024 அம்னோ பொது பேரவையை தொடக்கி வைத்து கொள்கை உரையாற்றும் போது அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், வெளி தரப்பினரின் கோரிக்கைகளிலிருந்து சபா மாநிலத்தை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும் என்று டாக்டர் அஹ்மட் சாஹிட் கூறியுள்ளார்.

சபா மீது சுலு தரப்பினர் மேற்கொண்ட கோரிக்கையை அனைத்துலக நீதிமன்றத்தில் தோல்வி அடையச் செய்த, சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட்டுக்கு துணைப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)