பொது

முகிடின் மீதான விசாரணை அவசரமாக மேற்கொள்ளப்படவில்லை - போலீஸ்

27/08/2024 05:48 PM

கிளந்தான், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 3R எனப்படும், இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் மீதான குற்றச்சாட்டும் விசாரணையும் அவசரமாக மேற்கொள்ளப்படவில்லை.

3ஆர் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விசாரணயை ஒரு வாரத்தில் முடிப்பது போலீசின் வழக்கமான நடைமுறை என்பதை தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் சுட்டிக் காட்டினார்.

''அவசரம் இல்லை. இதற்கு முன்னர், நாங்களும் தெரிவித்து விட்டோம், இந்த 3ஆர் விசாரணையை நாங்கள் ஏழு நாட்களில் மேற்கொள்வோம் என்று. நாங்கள் ஏழு நாட்களில் எங்களின் அடைவுநிலையைக் காட்டுவோம். அவசரமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவதில் தொடர்பில்லை,'' என்றார் அவர்.

இன்று, கிளந்தான், கோலா கிராய், டபோங், கம்போங் ஜெனாலில் கம்போங் அங்காட் மடானி திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் ரசாருடின் அவ்வாறு தெரிவித்தார்.

16-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரத்தை உட்படுத்தி முகிடின் உரை அமைந்ததாக கூறப்படுவது தொடர்பான போலீஸ் விசாரணை, அவசரமாக மேற்கொள்ளப்பட்டதோடு பல கேள்விகளையும் எழுப்புவதாக பெர்சத்து துணை தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் ஃபைசால் அசுமு குற்றஞ்சாட்டியது தொடர்பில் விளக்கமளிக்கும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)