பொது

போலந்து உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த அதன் வெளியுறவு அமைச்சரின் வருகை அமையும்

04/09/2024 05:27 PM

கோலாலம்பூர், 04 செப்டம்பர் (பெர்னாமா) -- போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லா சிகோர்ஸ்கி மேற்கொண்டிருக்கும் மலேசியாவிற்கான அதிகாரப்பூர்வ வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியா மற்றும் போலந்து இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து, குறிப்பாக தற்காப்பு, இலக்கவியல் பொருளாதாரம், விவசாய ஏற்றுமதி மற்றும் செம்பனை துறையில் ஒத்துழைப்பை உள்ளடக்கி தாங்கள் கலந்துரையாடியதாக பிரதமர் விவரித்தார்.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சராக பொருப்பேற்றதிலிருந்து, சிகோர்ஸ்கி மேற்கொள்ளும் மலேசியாவிற்கான முதம் அலுவல் பயணம் இதுவாகும்.

அவருடன் போலந்தின் தற்காப்பு துணை அமைச்சர் பாவெல் சோவேரி ஜலேவ்ஸ்கி மற்றும் விவசாய துணை அமைச்சர் மைக்கேல் கோலோட்ஸிஜாக் ஆகியோரும் இப்பயணத்தில் இணைந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)