பொது

இணையக் குற்றங்களைத் தடுக்க எம்.சி.எம்.சி உடன் இணைகிறது பி.டி.ஆர்.எம்

07/09/2024 07:03 PM

பாங்கி, 07 செப்டம்பர் (பெர்னாமா) -- டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தீவிரவாதம் மற்றும் குற்றவியல் இயக்கங்களைத் தடுப்பதற்கும் அதைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் பி.டி.ஆர்.எம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி உடன் இணைந்து செயல்படுவதாக தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இணைய சூதாட்டம், சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மோசடி போன்ற குற்றச் செயல்களுக்கும் டெலிகிராம் உட்பட சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

''ஆனால் இதைக் கட்டுப்படுத்துவது கடினம். காரணம் நம்முடன் இது (சமூக ஊடகங்கள்) பிணைக்கப்படவில்லை. அதனால் தான் கண்காணிப்பை எளிதாக்குவதற்கு அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு உரிமம் வழங்குகிறது,'' என்றார் அவர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]