பொது

சிறார்களின் தவறான காணொளிகளை வெளியிடுபவர்கள் குறித்து புகாரளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது

10/09/2024 06:31 PM

கூலாய், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- சிறார்களை உட்படுத்திய தவறான படங்கள் அல்லது காணொளிகளை வெளியிடும் சமூக ஊடக பயனர்களின் உள்ளடக்கம் குறித்து புகாரளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி வரவேற்கிறது.

நாட்டில், சிறார்கள் தொடர்பில் நிலவும் குற்றச் செயல்களைத் தடுப்பதை உறுதிச் செய்ய இந்த ஒத்துழைப்பு அவசியம் என்று, தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் கூறியுள்ளார்.

"மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அவர்களின் பணியைச் செய்யவில்லை என்பதற்காக இல்லை. ஆனால், நமக்கு இது அவர்களின் 'algorithm' என்று தெரியும். நீங்கள் மட்டுமல்ல யார் அதன் உள்ளடக்கத்தைப் பார்த்தாலும் சரி. அதனை கண்காணிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. எனினும், பொதுமக்களின் புகார் கிடைத்தால் அதற்கான தகுந்த நடவடிக்கையை எளிதாக எடுக்க முடியும். ஆக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கென மின்னஞ்சல் பக்கம் உள்ளது. அதை சென்று பார்க்கலாம். அல்லது தொலைப்பேசி எண் உள்ளது அதற்கு புலனம் வழி தொடர்பு கொள்ளலாம். இதுவே, விசாரணை மேற்கொள்ள எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறந்த வழி," என்றார் அவர்.

மக்கள், குறிப்பாக, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சமூக ஊடகத்தின் உள்ளடக்கமாக பயன்படுத்த வேண்டாம் என்று, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)