பொது

இரசாயன காற்று தூய்மைக்கேடு சம்பவம்; குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை

10/09/2024 06:53 PM

ஜாலான் புத்ரா, 10 செப்டம்பர் (பெர்னாமா) --  ஜோகூரில் நிகழ்ந்த இந்த இரசாயன காற்று தூய்மைக்கேடு சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இருப்பினும், சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்காததால், அச்சம்பவம் தொடர்பாக மேலும் கருத்துரைக்க இயலாது என்று  இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

"நாங்கள் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து ஒரு புதிய அறிக்கையைப் பெறுகிறோம். அதன் பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமா மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம்."

முன்னதாக காற்று தூய்மைக்கேட்டினால் ஜோகூர் பாருவில் உள்ள மூன்று பள்ளிகள் P-d-P-R எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

Kampung Maju Jaya தேசியப் பள்ளி, Hidayah இஸ்லாம் ஆரம்பப் பள்ளி,  Hidayah இஸ்லாம் இடைநிலைப் பள்ளி ஆகியவை பாதிக்கப்பட்ட பள்ளிகளாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)