பொது

ஒரு மாதக் குழந்தை உயிரிழப்பு; தாதிக்கு 7 நாள்கள் தடுப்புக் காவல்

11/09/2024 05:39 PM

கோத்தா பாரு, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- ஒரு மாதக் குழந்தை உயிரிழக்கும் அளவிற்கு அலட்சியமாக இருந்ததற்காக விசாரணைக்கு உதவ, கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள மகப்பேறு மையத்தில் பணிபுரியும் தாதி ஒருவர் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், செக்‌ஷன் 31(1) (a)-வின் கீழ் விசாரணைக்கு உதவ, செவ்வாய்க்கிழமை வரையிலான 20 வயதிற்குட்பட்ட அப்பெண்ணின் தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் ரயிஸ் இம்ரான் ஹமிட் பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தங்கள் தரப்புக்கு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்திய கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ரொஸ்டி டாவுட், நேற்று மாலை மணி 6 அளவில் சம்பந்தப்பட்ட அப்பெண்ணை கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.

காலை மணி 5.30-க்கு சம்பந்தப்பட்ட அத்தாதி, அக்குழந்தைக்கு பால் கொடுத்ததும் அக்குழந்தை சுயநினைவை இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், அக்குழந்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அக்குழந்தை உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)