பொது

கட்டாயத் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 4 பதின்ம வயதினர் காப்பாற்றப்பட்டனர்

11/09/2024 08:00 PM

ஈப்போ, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று, பேராக், ஈப்போவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கட்டாயத் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வங்காளதேசத்தைச் சேர்ந்த நான்கு பதின்ம வயதினர் பேராக் மாநில ஆள்பலத் துறை, JTK மேற்கொண்ட தொழிலாளர் செயல்பாட்டு சோதனையில் காப்பாற்றப்பட்டனர்.

அந்தத் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக 14-இல் இருந்து 16 வயதிற்குட்பட்ட அந்நால்வரும் பணிபுரிந்து வந்ததாக நம்பப்படுகிறது. 

2007-ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டம் செக்‌ஷன் 44-இன் கீழ் அந்நால்வருக்கும் இடைக்கால பாதுகாப்பு உத்தரவு விண்ணப்பிக்கப்படும் என்று பேராக் மாநில JTK  இயக்குநர் முஹமட்ஃபௌசி அப்துல் கானி தெரிவித்தார். 

ஒரு மாதத்திற்கும் மேலாக அத்தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் மூலம் இது சாத்தியமானதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

அதேச் சட்டம் செக்‌ஷன் 14-இன் கீழ் 58 வயதுடைய சீன நாட்டு முதலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]