பொது

சீஃபீல்டு மகா மாரியம்மன் ஆலயத் தாக்குதல்; மிரட்டல் விடுத்தவருக்கு சிறை

30/09/2024 05:49 PM

கோலாலம்பூர், 30 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுபாங் ஜெயாவில் உள்ள  சீஃபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தை தாக்குவதாக மிரட்டல் விடுத்தது உட்பட எட்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் 'WOLF PACK' குழுவின் முன்னாள் தலைவரான 39 வயதான மஹாடி மாமாட்டிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. 

தற்காப்பு வாதத்தின் இறுதியில், சம்பந்தப்பட்ட வழக்கை அத்தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால் நீதிபதி டத்தோ நோரின் படாருடின் இத்தீர்ப்பை அளித்தார். 

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு skizofrenia அல்லது மனநல பாதிப்பு இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றத்தை புரியும்போது அவர் சுயநினைவுடனேயே இருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.

அதோடு, குற்றஞ்சாட்டப்பட்டுவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

எனவே, குற்றவாளி கைது செய்யப்பட்ட 2019-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதியில் இருந்து அவரின் 10 ஆண்டுகால சிறைத் தண்டனையை ஒரே நேரத்தில் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]