விளையாட்டு

சூப்பர் லீக் கிண்ணம்; நேற்றிரவு ஆட்டத்தில் கே.எல் சிட்டி எஃப்.சி வெற்றி

30/09/2024 06:32 PM

கோலாலம்பூர், 30 செப்டம்பர் (பெர்னாமா) -- சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டி.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல் சிட்டி எஃப்.சி, பினாங்கு எஃப்.சி அணியை 4-2 என்ற கோல்களில் தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே பினாங்கு எஃப்.சி முதல் கோலை அடித்து, கே.எல் சிட்டி எஃப்.சி அணியை பின்னுக்குத் தள்ளியது.

இருப்பினும், எட்டாவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து கே.எல் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது.

22-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து முதல் பாதி ஆட்டத்தை கே.எல் சிட்டி தன் வசமாக்கியது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், தேசிய ஆட்டக்காரர் Penyerang muda  முஹமட் ஹக்கிமி அசிம் ரோஸ்லி, கே.எல் சிட்டிக்கான மூன்றாவது கோலை அடித்தார்.

74-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து முஹமட் ஹக்கிமி கே.எல் சிட்டியின் வெற்றி உறுதி செய்த வேளையில், 83-வது நிமிடத்தில் பினாங்கு எஃப்.சி தனது இரண்டாவது கோலை அடித்தது.

இந்த வெற்றியின் மூலம் கே.எல் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]