பொது

பயன்படுத்த முடியாத கார்கள் பயன்பாட்டில் இருந்தால் புகாரளிப்பீர் - ஜே.பி.ஜே

01/10/2024 06:57 PM

காஜாங், 01 அக்டோபர் (பெர்னாமா) -- சாலைகளில் கிடக்கும் பழுதடைந்த அல்லது 'total lost' எனப்படும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கார்களை கண்டறிந்தால் அவற்றை தமது தரப்பு அல்லது போலீசிடம் புகாரளிக்கும்படி சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

மோசமான சாலை விபத்துகளால் சேதமடைந்து, அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று வகைப்படுத்தப்பட்ட அக்கார்களை பொறுப்பற்ற சில தரப்பினர் மீண்டும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் அத்துறை கூறியது.

இவ்விவகாரத்தை தமது தரப்பு தீவிரமாகப் பார்ப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

பயன்படுத்த முடியாது என்று வகைப்படுத்தப்பட்ட தமது சகோதரரின் கார் சாலையில் பயன்பாட்டில் இருப்பதாக நபர் ஒருவர் வெளியிட்ட காணொளி ஒன்று அண்மையில் டெலிகிராம் செயலியில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]