பொது

கெடா வெள்ளத்தில் 114 இடங்கள் பாதிப்பு

09/10/2024 04:52 PM

அலோர் ஸ்டார், 09 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை தொடங்கி கெடாவில் ஏற்பட்டுள்ள மூன்றாவது வெள்ள அலையை தொடர்ந்து, அம்மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 114 இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குபாங் பாசு, கொத்தா செதார், போகோ செனா, பாலிங் மற்றும் பெண்டாங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 21 தற்காலிக நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாக, கெடா மாநிலத்தின் மலேசிய பொது தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முஹமாட் சுஹாய்மி முஹமாட் சாயின் தெரிவித்தார்.
    
சீக், பாடாங் தெராப், லங்காவி, யான், கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக முஹமட் சுஹய்மி கூறினார்.

''சுங்கை படாங் பாசிர், சுங்கை பாடா, சுங்கை பெரிக், சுங்கை கெப்பாலா பத்தாஸ், சுங்கை தாமான் அமான், சுங்கை ஜம்பாத்தான் தார், சுங்கை குபு பஞ்சாங் மற்றும் சுங்கை பெண்டாங் ஆகிய எட்டு ஆறுகள் அபாய அளவை தாண்டி விட்டன'', என்றார் அவர். 

மிதமான அளவை விட மாலையில் பெய்த மழை இரவு வரை தொடர்ந்ததால், ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்ததாக அவர் விளக்கினார்.

செவ்வாய்கிழமை முதல் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மீண்டும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)