பொது

தபால் சேவை சட்டத்தில் திருத்தம் குறித்து ஆராய ஆலோசனை அமைப்பு நியமனம்

09/10/2024 06:17 PM

கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- 2012-ஆம் ஆண்டு தபால் சேவை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆராய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC ஆலோசனை அமைப்பை நியமித்துள்ளது.

தற்போதுள்ள தபால் தொழில்துறை மற்றும் பொருட்கள் அனுப்பும் சேவையில் உள்ள மாற்றத்திற்கு ஏற்ப திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிக்கையைப் பூர்த்தி செய்ய, ஆலோசகர்களுக்கு 8 லிருந்து 12 மாதங்கள் வரை தேவைப்படும் என்று தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''மிக விரைவில் என்றால் 20260இல். எனவே, எங்களுக்கு கால அவகாசம் தேவை. ஆனால், காலத்திற்கு ஏற்ற உருமாற்றத்தை மேற்கொள்ள அமைச்சும் எம்சிஎம்சி-உம் மாற்றம் கண்டுள்ள தபால் மற்றும் பொருட்கள் அனுப்பும் சேவையை காண உள்ளனர்'', என்றார் அவர்

சமூக வலைத்தளம் போன்ற துறையில் உள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள, ஒட்டுமொத்த தபால் நிறுவனத் துறையை உட்படுத்தி ஆலோசகர் தரப்பு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)