பொது

கல்வி & சமூக ஊடக கல்வியறிவை வழங்குவது பெர்னாமா முயற்சிகளில் ஒன்று

12/10/2024 06:11 PM

தஞ்சோங் செபாட், 12 அக்டோபர் (பெர்னாமா) -- சிப்பாங், தஞ்சோங் செபாட், கம்போங் பத்து லாவுட் சமூகத்திற்கான கல்வியையும் சமூக ஊடக கல்வியறிவையும் வழங்குவது 'Program Santuni MADANI: Satu Pemimpin Satu Kampung' வழி பெர்னாமா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகும்.

Kampung Angkat BERNAMA@Batu Laut திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மத்தியில் வரை, கல்வி அம்சத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை பெர்னாமா வகுத்துள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''இக்கிராமத்தில் பிள்ளைகளின் வாசிப்பு நிலையை மேம்படுத்த நாங்கள் முயற்சிப்போம். நாங்கள் ஆங்கில மொழி, ஊடக தொழில் குறித்து தகவலை வழங்குவது, ஊடகக் கல்வி ஆகிய அம்சத்திலும் கவனம் செலுத்துகிறோம். டிவெட்டின் நன்மை அத்துறையைத் தேர்ந்தெடுப்பதால் என்ன சாதிக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்க அத்தரப்பினரையும் நாங்கள் அழைத்து வருவோம்'' என்றார் அவர்

இன்று, 'Santuni Madani: Program Satu Pemimpin, Satu Kampung' நிகழ்ச்சியின் தொடக்க விழாவின்போது நூருல் அஃபிடா அவ்வாறு கூறினார்.

சம்பந்தப்பட்ட கிராமத்தில், மூத்த குடிமக்கள் இணையம் வழியான மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக் கொண்டு சமூக ஊடகம் தொடர்பான கல்வியில் மோசடி மற்றும் இல்லாத முதலீடு போன்றவை குறித்தும் மக்களுக்கு விளக்கமளிக்கப்படும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)