பொது

உற்சாகமான வாழ்க்கை முறைக்கு தேசிய விளையாட்டு தினம் சிறந்த களம்

12/10/2024 06:15 PM

கங்கார், 12 அக்டோபர் (பெர்னாமா) -- இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை உணர்வை ஊக்குவிப்பதோடு, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான வாழ்க்கை முறைக்கு தேசிய விளையாட்டு தினம் சிறந்த களமாக அமைகின்றது.

மக்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக, மலேசிய மடானி சூழலில் இளைஞர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய, விளையாட்டு அம்சங்களுடன் இது கூடுதலாக வலியுறுத்தப்படுவதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப்  தெரிவித்தார்.

''ஆரோக்கியமான, உற்சாகமான மற்றும் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க, விளையாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில், தேசிய விளையாட்டு தினம் அரசாங்கத்தின் அக்கறையை நிரூபிக்கிறது. மலேசியாவை விளையாட்டுக்குறிய நாடாக மாற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி நிரலாக இது உருவாக்கப்பட்டுள்ளது'', என்றார் அவர்.

இன்று, பெர்லிஸ் கங்கரில் உள்ள துவான்கு சைட் புத்ரா விளையாட்டு வளாகத்தில் பெர்லிஸ் மாநில அளவிலான 2024 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

2015 முதல் கடந்த ஆண்டு வரை 3 கோடியே 60 லட்சம் பேர் இதுவரை, தேசிய விளையாட்டு தினத்தில் பங்கேற்றிருப்பது பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)