சபா, 03 நவம்பட் (பெர்னாமா) -- எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தலில் தனித்து போட்டியிட அம்மாநில தேசிய முன்னணி தயாராக உள்ளது.
பிற கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சபா மாநில தேர்தலில் சபா மக்கள் கூட்டணி, GRS உடன் இணைந்து செயல்பட சாத்தியம் உள்ளதோடு தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் ஒத்துழைப்பை உறுதிசெய்துள்ளதாக தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருந்ததை புங் மொக்தார் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சபா மாநில தேர்தலில் தாங்களும் தனித்து செயல்படுவதற்கான சாத்தியம் உள்ளது குறித்து அம்மாநிலத்தில் உள்ள சில கட்சிகளும் குறிப்பிட்ட தலைவர்களும் வெளியிட்ட அறிக்கைகள் கோடி காட்டுவதாக அவர் கூறினார்.
மற்ற கட்சிகள் தனித்து செயல்பட முடிவு செய்தால் சபாவின் தேசிய முன்னணியும் அம்னோவும் தடையாக இருக்காது.
மாறாக, தனித்துப் போட்டியிட விரும்பும் அனைத்துக் கட்சிகளும் தேசிய முன்னணியின் கடுமையான போட்டியைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்று புங் மொக்தார் குறிப்பிட்டார்.
மேலும் அவ்விரு கட்சிகளும் எதற்கும் அஞ்சவில்லை என்றும், மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள கேந்திரங்களைத் தயார் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)