விளையாட்டு

மென்செஸ்டரின் புதிய நிர்வாகியானார் ரூபன் அமோரின்

12/11/2024 05:46 PM

லண்டன், 12 நவம்பர் (பெர்னாமா) -- புதிய நிர்வாகியாக ரூபன் அமோரினின் வருகைக்குப் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்த்துகல் பயிற்றுநரான அவர், பிரகாவுக்கு எதிராக 4-2 என்ற கோல்களில் 11-வது லீக் வெற்றியைப் பதிவு செய்த பின்னர் ஸ்போர்ட்டிங் லிஸ்பனில் இருந்து விடைபெற்று இங்கிலாந்து வந்தடைந்துள்ளார்.

மென்செஸ்டர் யுனைடெட்டின் இடைக்கால நிர்வாகியாக, அதன் முன்னாள் ஆட்டக்காரரரும் உதவியாளருமான ரூட் வேன் நிஸ்டெல்ரோய் பொறுப்பேற்றது முதல் கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் அக்கிளப் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நேர்மறையான வளர்ச்சியோடு புதிய நிர்வாகியின் வருகை இன்னும் பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

இன்று காலை பயிற்சி மையத்திற்கு அமோரிமின் வருகையை அறிவித்த எம்.யூ, அதன் பின்னர் நிஸ்டெல்ரோய் கிளப்பை விட்டு வெளியேறியதையும் உறுதிப்படுத்தியது.

20 முறை பிரீமியர் லீக்கை கிண்ணங்களை வென்ற எம்.யூ 2013-ஆம் ஆண்டில் சார் அலெக்ஸ் ஃபெர்கசன் பதவி விலகியதிலிருந்து பெரிய அளவிலான சாதனையை ஏற்படுத்துவதிலிருந்து தவறியது.

அவருக்கு பிறகு, எத்தனையோ நிர்வாகிகள் வந்தபோதிலும் அக்கிளப்பின் எதிர்காலம் சவாலாக இருக்கும் பட்சத்தில் 39 வயதான அமோரின் யுனைடெட்டின் ஆறாவது நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]