கோலாலம்பூர், 12 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம்-இன், இராணுவ பயிற்சி கழகம், ஏ.எல்.கே-வில் பல முறை புகாரளிக்கப்பட்ட பகடிவதை சம்பவங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தும்படி மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தற்காப்பு அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் பகடிவதைக்கு ஆளான அப்பல்கலைக்கழக புதிய மாணவர் விலா எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் இதுபோன்ற பகடிவதை சம்பவங்கள் இனியும் நீடிக்கக்கூடாது என்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், சம்பந்தப்பட்ட அம்மாணவரை மட்டும் பாதிக்கவில்லை.
மாறாக, நாட்டின் அந்த உயர்க்கல்விக் கழகத்தின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் கலங்கம் விளைவித்துள்ளதாக மாமன்னர் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தற்காப்பு அமைச்சர் டத்தோசஶ்ரீ முஹமட் காலெட் நோர்டினையும் மாமன்னர் இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]