விளையாட்டு

மலேசியக் கிண்ண காற்பந்து போட்டி; ஶ்ரீ பஹாங் FC தகுதி

23/12/2024 08:03 PM

தெமர்லோ, 23 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசியக் கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதிக்கு  ஶ்ரீ பஹாங் FC  தகுதி பெற்றுள்ளது. 

நேற்று நடைபெற்ற இரண்டாம் காலிறுதி ஆட்டத்தில் அது பேராக் FC  உடன்  3-3 என்று சமன் கண்ட போதிலும் 4-3 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில், அதன் வாய்ப்பு கை நழுவி போகாமல் தற்காக்கப்பட்டது. 

பகாங், தெமர்லோவில் நடைபெற்ற இவ்வாட்டத்தில், ஐந்தாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து  ஶ்ரீ பஹாங் ஆட்டத்தை அற்புதமாக தொடங்கியது. 

அதனை அடுத்த சில நிமிடங்களில், பேராக் அதற்கான முதல் கோலைப் போட்டது. 

அதற்கு முதல் கோலை அடித்த மெனுவல் ஹிடால்கோ 30-வது நிமிடத்தில் மீண்டும் தமது அணிக்கு இரண்டாம் கோலைப் பெற்றுத் தந்தார். 

அதேபோல, பேராக் FC தனது அணிக்கான கோலைத் தொடர்ந்து போட்டது. 

ஆட்டம் இரண்டாம் பாதியில் மேலும் சவாலாக மாறியது. 

அதில், ஹிடால்கோ மூன்றாம் கோலைப் போட்டு  ஶ்ரீ பஹாங் அணிக்காக ஹட்ரிக் சாதனை செய்தார். 

3-3 என்று இரண்டாம் பாதி முடிந்த நிலையிலும், கடந்த ஆட்டத்தில்  ஶ்ரீ பஹாங் அடைந்த வெற்றி இவ்வாட்டத்தில், அதன் தலையைச் தப்பிக்கச் செய்துள்ளது. 

 ஶ்ரீ பஹாங் அரையிறுதியில், சபா அல்லது குச்சிங் சிட்டி FC-யைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


-- பெர்னாமா