பொது

ஐந்து மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை

12/12/2024 07:26 PM

கோலாலம்பூர், 12 டிசம்பர் (பெர்னாமா) -- ஐந்து மாநிலங்களில் நாளை வரை எச்சரிக்கை நிலையிலான தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா விடுத்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், கிளாந்தான், திரெங்கானு ஆகியவையே அந்த ஐந்து மாநிலங்களாகும் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.

கெடாவில், லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோ சேனா, பாடாங் தெராப், பென்டாங், சிக், பாலிங் ஆகியப் பகுதிகளை உள்ளடக்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராக்கில், உலு பேராக்கிற்கும், கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாசோக், மாச்சாங், பாசிர் பூத்தே, கோலா கிராய் ஆகிய பகுதிகளையும் உட்படுத்தி இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.

திரெங்கானுவில், பெசுட், கோலா நெருஸ் மற்றும் கோலா திரெங்கானு ஆகிய பகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்பான மேல் விவரங்களுக்கு, மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம், myCuaca செயலி, அத்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை நாடுவதோடு 1-300-22-1638 என்ற எண்ணையும் தொடர்புக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)