பொது

மூன்று மாநிலங்களில் இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு தொடர் மழை

17/12/2024 04:52 PM

கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) -- மூன்று மாநிலங்களில், இன்று தொடங்கி அடுத்த மூன்று நாள்களுக்கு தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களில் அனைத்து பகுதிகள் உட்பட பகாங்கில் ஜெராந்துட், மாரான், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என மெட்மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி கூறியது.

வியாழக்கிழமை தொடங்கி டிசம்பர் 22-ஆம் தேதி வரை, சரவாக்கில், கூச்சிங், செரியான், சமரஹான், ஶ்ரீ அமான், பெதோங், சரிக்கே, சிபு மற்றும் மூகா ஆகிய பகுதிகளிலும், ஜோகூரில் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி, சபாவில் ரனாவ், கோத்தா பெலுட், தெலுபிட், கினபதாஙான், பெலுரான், சண்டாக்கான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளிலும் அதே நிலை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மெட்மலேசியா குறிப்பிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)