கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா மூன்று மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர் மழை பெய்யும் என்று அம்மையம் குறிப்பிட்டுள்ளது.
திரெங்கானுவில், டுங்கூன் மற்றும் கெமாமான், பகாங்கில், ஜெராந்தூட், மாரான், குவந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜோகூரில், செகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சூழ்நிலை சரவாக்கில், கூச்சிங், செரியான், சமரஹான், ஶ்ரீ அமான், பெதோங், சரிக்கே, சிபு மற்றும் முகாவிலும், சபாவில், ரானாவ், கோத்தா பெலுட், சண்டாக்கான், கூடாட் ஆகிய பகுதிகளில் நாளை முதல் இம்மாதம் 22ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)