உலகம்

மயோட்டேவைத் தாக்கிய சக்திவாய்ந்த சிடோ சூறாவளி

16/12/2024 03:51 PM

பிரான்ஸ், 16 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரான்ஸ் தீவுகளான மயோட்டேவைத் தாக்கிய சக்திவாய்ந்த சிடோ சூறாவளியினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சூறாவளியினால் இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச்சூறாவளியினால் மயோட்டேவில் கனமழை பெய்ததோடு, மரங்கள் சாய்ந்தன.

200 கிலோமீட்டர் வேகத்தில் மயோட்டேவைக் கடந்த சிடோ சூறாவளியினால் தற்காலிக வீடுகள், அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்தன.

இது, 90 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தீவைத் தாக்கிய மிக வலுவான சூறாவளியாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சூழ்நிலையினால், உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் குறித்து அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)