விளையாட்டு

BWF 2024: இறுதி ஆட்டத்தில் சீனாவிடம் வீழ்ந்தது மலேசியா

15/12/2024 07:42 PM

ஹங்சோ, 15 டிசம்பர் (பெர்னாமா) -- உலக பூப்பந்து சம்மேளனம், BWF-இன் இறுதி உலக தொடர் போட்டியின் கிண்ணத்தை வெல்லும் இலக்கில், தேசிய கலப்பு இரட்டையரான செங் தாங் ஜி - தோ ஒ வெய் ஜோடி இன்று தோல்வி அடைந்தது.

ஹங்சோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், மலேசிய ஜோடியினர், சீனாவின் சேங் சி வெய் - ஹுவாங் யா கியோங் இணையரிடம் வீழ்ந்தனர்.

நாட்டிற்காக கன்னி முயற்சியை அவர்கள் பதிவு செய்ய தவறினாலும், உலக அளவில் எட்டாவது இடத்தில் இருக்கும் செங் தாங் ஜி - தோ ஒ வெய் ஜோடி ஜோடி,

2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சீன ஆட்டக்காரர்களுக்கு எதிராக இறுதிவரை போராடி, 18-21, 21-14 மற்றும் 17-21 என்ற நிலையில் தோற்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)