கூச்சிங், 16 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் முதல் காலிறுதி சுற்றில், சொந்த அரங்கில், தனது வெற்றியை தற்காக்க சரவாக்கின் கூச்சிங் சிட்டி FC தவறியது.
நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் அது, 0-1 என்ற நிலையில், சபா FC இடம் தோல்வி கண்டது.
சரவாக் மாநில அரங்கில், நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில் சபா FC முதல் பாதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
அதன் பலனாக, பினால்டி பகுதியில் முஹமட் ஃபர்ஹான் ரோஸ்லான் மூலம் அதன் ஒரே கோலை சபா FC அடித்தது.
ஆட்டத்தை சமன் செய்வதற்காக, கூச்சிங் FC இரண்டாம் பாதியில் தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி விடாமுயற்சியுடன் விளையாடியது.
ஆனால், மார்டின் ஸ்டானோ தலைமையிலான அணி அதன் அனைத்து முயற்சிகளும் இலக்கை அடைய முடியாமல் தோல்வி கண்டது.
கூடுதல் நிமிடத்திலும், சரவாக் கோல் அடிக்க முடியாமல் போனதால், 1-0 என்ற நிலையில் சபா எதிரணியில் வெற்றிப் பெற்றது.
இதன் வழி, டிசம்பர் 23-ஆம் தேதி, கினாபாலு லீக்காஸ் அரங்கில் நடைபெறவுள்ள இரண்டாம் காலிறுதி ஆட்டம் சபாவிற்கு சற்று சாதமாய் முடியும் என்று அவ்வணி நம்புகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)