பேங்காங், 15 டிசம்பர் (பெர்னாமா) -- ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியில் A குழுவின் மூன்றாவது ஆட்டத்தில், மலேசியா நடப்பு வெற்றியாளரான தாய்லாந்திடம் 1-0 என்ற கோலில் தோல்வியடைந்தது.
நேற்றிரவு, பேங்காங்க்கில உள்ள ராஜமங்களா தேசிய அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் மலேசியா தோல்வி கண்டதன் வழி, அரையிறுதி கட்டத்திற்கான அதன் பாதை கடினமாகி உள்ளது.
சொந்த அரங்கில், களம் கண்ட போதிலும் கடும் சவாலுக்குப் பின்னரே தாய்லாந்து தனது வெற்றியை உறுதி செய்தது.
முதல் பாதி ஆட்டம் வரை கோல் போடுவதில் இரு அணிகளும் தொடர்ந்து முயற்சியித்தன.
ஆனால், அனைத்தும் பலனின்றி முடிந்தது.
பின்னர், இரண்டாம் பாதியின் 57-வது நிமிடத்தில் தாய்லாந்து சொந்த மண்ணில் அதன் ஒரே கோலைப் போட்டது.
மலேசியா, தங்களால் இயன்றவரை முயற்சித்த போதிலும், ஆட்டத்தை வெல்வதற்காக இலக்கில் கோட்டை விட்டது.
அதன் விளைவாக, A குழு பட்டியலில், தாய்லாந்து, சிங்கப்பூருடன் ஆறு புள்ளிகளுடன் சமநிலை கண்டிருக்கும் நிலையில் , மலேசியா நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நாடுகளே, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால்...
டிசம்பர் 20ஆம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில் சிங்கப்பூருக்கு எதிராக களமிறங்கும் மலேசியா வெற்றி பெற்றாக வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)