புக்கிட் ஜாலில் , 21 டிசம்பர் (பெர்னாமா) - 2024 ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியில் இருந்து மலேசியா விடைபெற்றுக் கொண்டது.
நேற்றிரவு நடைபெற்ற குழு பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் மலேசியா சிங்கப்பூருடன் மோதியது.
புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் மலேசியா களமிறங்கியது.
கோல் போடும் பல முயற்சிகளை மலேசியா மேற்கொண்டாலும் சிங்கப்பூர் அதனை தடுத்து நிறுத்தியது.
மலேசியாவை போன்று சிங்கப்பூரும் கோல் போடும் முயற்சிகளை மேற்கொண்டது.
இருப்பினும் அந்த முயற்சிகள் சிங்கப்பூருக்கு பலன் அளிக்கவில்லை.
ஆட்டம் கோல்களின்றி நிறைவடைய புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியது.
குழுப் பிரிவில் மலேசியா 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
12 புள்ளிகளுடன் தாய்லாந்து முதல் இடத்தை பிடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)