கோத்தா பாரு, 29 டிசம்பர் (பெர்னாமா) - நேற்றிரவு முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கிளந்தான், கோலா கிராய் மற்றும் தானா மேரா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் நேற்று நண்பகல் மணி 12 தொடங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
அதில் கோலா கிராய் மாவட்டத்தில் பெடால், செனுலோங், தஞ்சோங் காலா ஆகிய மூன்று கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி, கேப்டன் அப்துல் ஃபாத்தா அப்துல் அஸியா தெரிவித்தார்.
மலேசிய பொது தற்காப்பு படை உறுப்பினர்கள்,கோலா கிராய் மாவட்டத்தின் வெள்ள அபாயப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டதாகக் அவர் கூறினார்.
அதேவேளையில், தானா மேரா மாவட்டத்தில், பத்து காஜா கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் முஹமட் ஹாக்கி ஹஸ்புல்லா தெரிவித்தார்.
அம்மாவட்டத்தில், பத்து செம்பிலான், பத்தாங் பெர்பாவ், லாவாங் ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)