உலகம்

டிரம்பிற்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு முன்புறத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

02/01/2025 04:15 PM

லாஸ் வேகஸ், 02 ஜனவரி (பெர்னாமா) -- லாஸ் வேகசில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு முன்புறம் டெஸ்லா சைபர்டிரக் தீ பிடித்து வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் எழுவர் காயத்திற்கு ஆளாகினர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையில் FBI-யும் இணைந்துள்ளது.

நியூ ஓர்லீன்சில் புத்தாண்டு தினத்தை கொண்டாடிய மக்கள் கூட்டத்தின் மீது ஆடவர் ஒருவர் டிரக்கைச் செலுத்தியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்வம் குறித்து கருத்துரைத்திருக்கும் டெஸ்லா தலைமை செயல்முறை அதிகாரி இலோன் மஸ்க், டெஸ்லா சைபர்டிரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு அல்லது வெடிபொருள்கள் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் இது வாகனத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் கூறி உள்ளார்.

இதனிடையே, இந்த வெடிப்புச் சம்பவம், பயங்கரவாதச் செயலா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று FBI அதிகாரி ஜெரமி ஸ்வார்ட்ஸ் தெரிவித்தார்.

கொலராடோவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற நபரை FBI அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]