நரினோ, 04 ஜனவரி (பெர்னாமா) -- தென்மேற்கு கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 28 பேர் காயத்திற்கு ஆளாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொகோட்டாவில் இருந்து தென்மேற்கே 570 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, நரினோ நகரில் உள்ள டாங்குவா நகராட்சிக்கு அருகில் இவ்விபத்து நிகழ்ந்தது.
இக்குவாடோர் எல்லைக்கு அருகில் உள்ள லாஸ் லாஜாஸ் ஜெபமாதாவின் சரணாலயத்திற்கு சுற்றுப் பயணிகளை ஏற்றிக்கொண்டு, காலி நகரத்திலிருந்து அப்பேருந்து புறப்பட்டது.
கொலம்பியாவில் சாலை விபத்துகளினால் ஆண்டுக்கு 8,000 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)