புத்ராஜெயா, 09 ஜனவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு மிக அதிகமான வசூலை அதாவது 6,557 கோடி ரிங்கிட் நிதி வசூலை மலேசிய சுங்கத் துறை, ஜே.கே.டி.எம் பதிவு செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் பதிவான 5,517 கோடி ரிங்கிட்டை காட்டிலும் 18.85 விழுக்காடு அதிகம் என்று ஜே.கே.டி.எம் இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முஹமட் சைனுடின் தெரிவித்தார்.
கடந்தாண்டு 6,117 கோடி ரிங்கிட் வசூலிப்பு பெற்றப்படும் என்று நிதி அமைச்சால் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், வசூலிக்கப்பட்ட நிதி அக்கணிப்பையும் தாண்டியதாக டத்தோ அனிஸ் ரிசானா குறிப்பிட்டார்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இவ்வாண்டு, ஜே.கே.டி.எம் 6,725 கோடி ரிங்கிட்டை வசூலிக்கும் என்று நிதி அமைச்சு நிர்ணயித்துள்ளதையும் டத்தோ அனிஸ் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]