கோலாலம்பூர், 8 ஜனவரி (பெர்னாமா) -- உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப மட்டுமின்றி, ஆசியான் உறுப்பினர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, நெறிமுறை, புதுமை மற்றும் உள்ளடக்கிய இலக்கவியல், தொலைத்தொடர்பு உட்பட பல்லூடகம் ஆகியவற்றில் இவ்வட்டாரத்தை உலகளவில் முன்னோடியாகவும் நிலைநிறுத்துகிறது.
இவ்வட்டாரத்தின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பையும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இயங்கலை அம்சங்களையும், இவ்வாண்டு ஆசியான் மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியாவிற்கு ஏற்படுத்துவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"ஆசியானின் ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட ஆலோசனைகள் ஆகியவை எல்லை தாண்டிய சவால்களை எதிர்கொள்ள வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. எங்கள் தலைமைத்துவத்தின் மூலம், இலக்கவியல் கண்டுபிடிப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் சமமான அணுகலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,'' என்றார் ஃபஹ்மி.
கோலாலம்பூரில் 2025-ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டில் உரையாற்றிய அவர் அவ்வாறு கூறினார்.
ஆசியான் வட்டாரத்தில் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையை உருவாக்குவதன் மூலம், 70 கோடிக்கும் அதிகமான ஆசிய மக்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதையும், நெறிமுறை தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகம் குறித்த விவாதங்களை வழிநடத்துவதையும் மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன்வழி, உலக தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஆசியான் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதாக ஃபஹ்மி மேலும் விவரித்தார்.
சிக்கலான இணைப்புகளை வழிநடத்துவது குறித்த உலகளாவிய உரையாடலை ஏற்று நடத்தும் மலேசியாவின் லட்சியத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]