ஷா ஆலம், 13 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த 2019-இல் இருந்து 2020-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்குள் துப்புரவு பணிகளை உட்படுத்தி 3,000 ரிங்கிட் கையூட்டுப் பெற்றதற்காக ஊரட்சிமன்ற நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு 15,000 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதி டத்தோ முஹமட் நாசிர் நோர்டின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை குற்றம் சாட்டப்பட்ட முஹமட் அமின் ரொஸ்டான் ஒப்புக்கொண்டதை அடுத்து இத்தீர்ப்பு அளிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 165-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]