புத்ராஜெயா, 15 ஜனவரி (பெர்னாமா) -- மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை 2024-ஆம் ஆண்டில் விமானப் பயணிகளின் போக்குவரத்து 14.3 விழுக்காட்டு வளர்ச்சியுடன் ஒன்பது கோடியே 71 லட்சம் பயணிகளை பதிவு செய்துள்ளது.
விமான நிலைய நடத்துனர்களின் திறன்மிக்க நடவடிக்கைகள் மூலம், விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டில், மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை மொத்தம் 8 கோடியே 49 லட்சம் பயணிகளுடன் 47.8 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
2024-ஆம் ஆண்டில் நிலையான வளர்ச்சியும், 2025 ஆம் ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான பயணிகளின் அதிகரிப்பும் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை எதிர்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதாக லோக் விவரித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]