சியோல், 15 ஜனவரி (பெர்னாமா) -- தம்மை கைது செய்யும் நடவடிக்கை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்று தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாலையில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தம்மை கைது செய்ய தமது வீட்டிற்கு அணிவகுத்து வந்ததை தொடர்ந்து எந்தவொரு வன்முறையும் நிகழாமல் தவிர்க்க விசாரணைக்கு ஒப்புக்கொண்டு சரணடைந்ததாக அவர் கூறினார்.
”இது உண்மையிலேயே சட்டவிரோத நடவடிக்கை. செல்லாத கைது ஆணையுடன் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் விதத்தைக் காண்பது வருந்தத்தக்கது. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை,” என்றார் அவர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பதாக தமது இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளியில் யூன் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]