பொது

நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிச் செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும்

01/02/2025 05:59 PM

கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு, வருங்கால தலைமுறையினரின் நல்வாழ்வுக்காக, நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிச் செய்ய, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவானில் உள்ள மக்கள் தொடர்ந்து ஒன்றுபட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

கூட்டரசு பிரதேசம், மலேசியாவின் செழிப்பு சின்னம் என்று, தமது முகநூல் பதிவில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வர்ணித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சி மையங்களாக செயல்படும் மூன்று முக்கிய கூட்டரசு பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதை, மக்கள் நினைவுக்கூற வேண்டும் என்றும், தமது பதிவில் ஃபஹ்மி வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகியவை கூட்டரசு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் பிப்ரவரி முதலாம் தேதி கூட்டரசு தினம் கொண்டாடப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு, கூட்டரசு பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு அதன் 21-வது நிறைவாண்டை நாடு கொண்டாடுகின்றது.

‘எங்கள் கூட்டரசு பிரதேசம்’ என்ற கருப்பொருளில், இவ்வாண்டின் கூட்டரசு பிரதேச தினம் கொண்டாடப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)