சுலவேசி மாகாணம், 25 ஜூலை (பெர்னாமா) -- நேற்று மாலை, இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவைக் கருவியில் 5.7ஆக பதிவாகிய நிலநடுக்கத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.
அதேவேளையில், 609 குடும்பங்களைச் சேர்ந்த 2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போசோ மாவட்டத்தின் உட்பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 35 வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் 14 வீடுகள், ஒரு கல்வி வசதி மற்றும் வழிபாட்டு தளம் முற்றாக சேதமடைந்ததாக, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவன பேச்சாளர் கூறினார்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, 11 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாக பதிவாகியிருப்பதால், BNPB தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மீண்டு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)