Ad Banner
Ad Banner
 பொது

மூவாரில் 2025 தேசிய மாதம் தொடக்க விழா

27/07/2025 02:42 PM

மூவார், 27 ஜூலை (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டு தேசிய மாதம் தொடக்க விழா மற்றும் ஜாலுர் ஜெமிலாங்கை பறக்கவிடும் பிரச்சாரம், இன்று காலை ஜோகூர் மூவார், தஞ்சோங் எமாஸ் சதுக்கத்தில் தேசப்பற்று உணர்வுடன் நடைபெற்றது.

இது வெறும் விழாவாக மட்டும் இல்லாமல், வரலாற்றை நினைவுகூறுவும், தியாகங்களை மதிக்கவும் மற்றும் நாட்டின் மீது அன்பு செலுத்தவும், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்று, தேசிய மாத தொடக்க விழாவில் உரையாற்றும் போது, அவர் அதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு கொண்டாட்டத்திற்கான 'மலேசிய மடானி: அரவணைக்கப்படும் மக்கள்' எனும் கருப்பொருள், மனிதநேயம், சமூகநலம் மற்றும் நீதி அடிப்பிடையில் தேசிய வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஒற்றுமையின் அடையாளமான ஜலூர் ஜெமிலாங்கை பறக்கவிடவும், 1 வீடு 1 ஜலூர் ஜெமிலாங் எனும் பிரச்சாரத்தை ஆதரிக்கவும் அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

மூன்று நாள்களாக, ரஹ்மா மடானி விற்பனை சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூவாரில் நடைபெற்று வரும் வேளையில், இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)