Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீனா பொது பூப்பந்து போட்டி; இறுதி ஆட்டத்தில் மலேசியா

27/07/2025 01:53 PM

சாங்சொ, 27 ஜூலை (பெர்னாமா) -- சீன பொது பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு நாட்டின் ஆடவர் இரட்டையரான ஆரோன் சியா - சோ வுய் இக் ஜோடி தேர்வாகியது.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர்கள் இந்திய ஆட்டக்காரர்களை நேரடி செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரென்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணையருடன் விளையாடிய ஆரோன் சியா - சோ வுய் இக் ஜோடி, 21-13, 21-17 என்று 42 நிமிடங்களில் தங்களின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த இரு ஜோடிகளும் இதுவரை சந்தித்த 14 போட்டிகளில், ஆரோன் சியா - சோ வுய் இக் ஜோடி 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பாரிஸ் மற்றும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற மலேசிய இணை, இறுதி ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியைச் சந்திக்கிறது.

இதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவில், நாட்டின் தேசிய இரட்டையரான பெர்லிதான் - எம் தீனா  ஜோடி, இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போட்டிக்கு விடை கொடுத்தது.

அரையிறுதி ஆட்டத்தில், சீனாவுடன் உடன் மோதிய மலேசிய இணை, 14-21 ,17-21 என்று 38 நிமிடங்களில், நேரடி செட்களில் தோல்வி கண்டது.

இந்த பருவத்தில், பெர்லிதான் - எம் தீனா ஜோடி, தாய்லாந்து பொது பூப்பந்து பட்டத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)