Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2025 சீனா பொதுபூப்பந்து போட்டி; பெர்லி தான் - எம் தீனா வெற்றி

25/07/2025 07:02 PM

சாங்சோவ், 25 ஜூலை (பெர்னாமா) -- 2025 சீனா பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நாட்டின் மகளிர் இட்டையர்களான பெர்லிதான் - எம் தீனா ஜோடி மட்டுமே வெற்றிகரமாக அரையிறுதிக்கு முன்னேறினர்.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர்கள், ஜப்பான் வீரர்களை நேரடி செட்களில் தோற்கடித்தனர்.

இதனிடையே, நாட்டின் கலப்பு இட்டையர்களான செங் டாங் ஜி - தோ இ வெய் ஜோடி, நேரடி செட்களில் சீனாவிடம் தோல்வி கண்டது.

சீனாவின் சாங்சோவில் நடைபெற்று வரும் இத்தொடரில் மலேசியா உபசரணை நாட்டு ஜோடியை எதிர்கொண்டது.

அதில், 43 நிமிடங்களில் சீனா 19-21, 15-21 என்று மலேசிய இணையை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தது.

முந்தைய மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மலேசிய ஜோடிக்கு இது முதல் தோல்வியாகும்.

மகளிர் பிரிவு ஆட்டத்திலும் மலேசியா அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் காலிறுதியில் தோல்வி கண்டது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)